Tamilசெய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் பாதுகாப்பு பொறுப்பை புழல் சிறைத்துறை ஏற்றது

தமிழக மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையை நிறைவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கான பாதுகாப்பு பொறுப்பை நேற்றிரவு புழல் சிறைத்துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். சிறைத்துறையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் வார்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு உடனடியாக திரும்ப பெறப்பட்டது.