எதிர்தாக்குதலில் உக்ரைனுக்கு பேரழிப்பு – ரஷ்யா அதிபர் புதின் தகவல்
உக்ரைன் கடந்த சில நாட்களாக எதிர்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதனால் சில கிராமங்களை ரஷியாவிடம் இருந்து மீட்டுள்ளேம் என தெரிவித்தது. அதேவேளையில், பேரழிவு என்ற வகையில் உக்ரைனுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதின் தெரிவித்துள்ளார்.
மேலும், இருநாட்டு எல்லையில் எங்களது பாதுகாப்பை அதிகரிக்க, எல்லைப் பகுதியில் உள்ள உக்ரைன் பகுதிகளை இன்னும் அதிக அளவில் கைப்பற்ற ரஷியப்படைகள் முயற்சி மேற்கொள்வார்கள். அதற்கான படைகளை குவிக்க வேணடிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டள்ளார்.
நேற்று ராணுவ பத்திரிகையாளர்கள் மற்றும் பிளாக்கர்ஸ்களை சந்தித்த புதின் ”உக்ரைன் 160 ராணுவ டாங்கிகள், 360-க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்களை கடுமையான சண்டையில் தற்போது இழந்துள்ளது. அதேவேளையில் கிவ் பகுதி புதிய தாக்குதலில் ரஷியா 54 டாங்கிகளை மட்டுமே இழந்துள்ளது. இதை உடனடியாக தெளிப்படுத்த முடியாது.
உக்ரைன் மக்கள் ஊடுருவல், ரஷியாவின் பெல்கோரோட் எல்லை பிராந்தியத்தில் உக்ரைன் தாக்குதல் போன்றவற்றை ரஷிய தடுத்து நிறுத்தும். ரஷியாவை பாதுகாக்கும் வகையில் உக்ரைனில் ஒரு பாதுகாப்பான பகுதியை உருவாக்குவது குறித்து ஆலோசனை செய்வோம்.
தற்போதைக்கு ராணுவ வீரர்களை அதிக அளவில் குவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருந்தால், ரஷியாவின் இலக்கு என்ன என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வீரர்கள் அழைக்கப்படுவார்கள். இன்றைய அளவில் அது தேவையில்லை” என்றார்.
கடந்த சில நாட்களாக உக்ரைன் கிரெம்ளினை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. குறிப்பாக டிரோன் மூலம் கட்டிடங்கள் தாக்கப்படுகிறது. இதனால் சிலர் பாதுகாப்பான இடத்திற்கு செல்வதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.