புதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா!
நயன்தாரா தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக விளங்குகிறார். முதன்மை கதாபாத்திரங்களில் மட்டும் அல்லாது பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளில் நயன்தாரா நடிப்பில் மட்டும் இன்றி கேமரா, எடிட்டிங் ஆகியவற்றிலும் ஆர்வம் செலுத்திவருகிறார். நயன்தாராவுக்கு விரைவில் இயக்குனர் ஆகும் எண்ணமும் இருக்கிறது என்கிறார்கள்.
2019-ம் ஆண்டு நயன்தாரா, தான் ஒப்புக்கொண்டுள்ள படங்களை எல்லாம் நடித்து முடித்த பிறகு ஒரு படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாக கூறுகிறார்கள்.