Tamilசெய்திகள்

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005-ம் ஆண்டு நவம்பர் முதல் இதுவரை ரூ.5 கோடியே 75 லட்சத்து 90 ஆயிரம் நிதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த மாதம் நலிந்தோர் மற்றும் மருத்துவ உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக இது அனுப்பப்படுகிறது.