சென்னையில் இருந்து கத்தாருக்கு புறப்பட்ட விமானம் திடீரென்று தறையிறக்கம் – விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னையில் இருந்து இன்று கத்தாருக்கு 336 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து விமானி உடனடியாக ஓடுபாதை அருகே அவசரமாக விமானத்தை தரையிறக்கினார்.
சரியான நேரத்தில் கோளாறை கண்டுபிடிக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.