டோனியின் சாதனையை முறியடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ரிங்கு சிங்
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய கொல்கத்தா அணி கடைசி 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரிங்கு சிங் தனி ஒருவராக போராடி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.
ஜோஸ்வா வீசிய 19-வது ஓவரில் ரிங்கு சிங் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்க விட்டார். கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் பந்து வீசினார். உமேஷ் யாதவ் முதல் பந்தில் 1 ரன் எடுத்தார். அதன் பிறகு 5 பந்துகளில் 5 சிக்சர்களை பறக்க விட்டு சாதனை படைத்தார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் படைத்துள்ளது. 20-வது ஓவரில் 30 ரன்கள் அடித்ததன் மூலமாக உலக டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரிங்கு சிங் படைத்துள்ளார்.
கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுத்த டோனியின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.
ரிங்கு சிங் – 30 ரன்கள் (குஜராத் டைட்டன்ஸ்)
எம் எஸ் தோனி – 24 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
நிக்கோலஸ் பூரன் – 23 (சென்னை சூப்பர் கிங்ஸ்)
ரோகித் சர்மா – 22 (டெக்கான் சார்ஜஸ்)
எம் எஸ் தோனி – 22 (பஞ்சாப்)
ஒரே ஓவரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:
கிறிஸ் கெயில் – ராகுல் சர்மா ஒவர் – 2012
ராகுல் திவேதியா – ஷெல்டான் காட்ரெல் ஒவர் – 2020
ரவீந்திர ஜடேஜா – ஹர்ஷல் படேல் ஓவர் – 2021
மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் – ஷிவம் மவி ஓவர் – 2022
ரிங்கு சிங் – யாஷ் தயாள் ஓவர்- 2023