சென்னைக்கு மாஸ் எண்ட்ரி கொடுத்த பென் ஸ்டோக் – வைரலாகும் வீடியோ
ஐபிஎல் தொடருக்கு இன்னும் 7 நாட்களே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்திற்கு திரும்பி உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர். அனைத்து வீரர்களும் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஜடேஜா நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடன் இணைந்து பயிற்சியை தொடங்கினார்.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இங்கிலாந்து வீரர்களான மொயின் அலி மற்றும் பென் ஸ்டோக்ஸ் சென்னை வந்தடைந்தனர். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.