Tamilசெய்திகள்

இந்தியாவின் நலனுக்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறேன் – ராகுல் காந்தி பதிவு

2019ம் ஆண்டில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கக்கப்பட்டது.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தன் மீதான நடவடிக்கை குறித்து ராகுல் காந்தி முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார். “இந்தியாவின் குரலுக்காக போராடிக்கொண்டிருக்கிறேன். இதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என ராகுல் ட்வீட் செய்துள்ளார்.

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அவர் வெற்றி பெற்ற கேரளாவின் வயநாடு தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. எனவே, அந்த தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்க முடியும். டெல்லியில் உள்ள அரசு பங்களாவை ராகுல் காந்தி காலி செய்ய வேண்டிய நிலையும் உள்ளது.