’லவ் டுடே’ புகழ் இயக்குநர் மற்றும் அடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கும் விக்னேஷ் சிவன்
2012ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தை இயக்க விக்னேஷ் சிவன் ஒப்பந்தமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.