பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 10 ஆம் தேதி தமிழகம் வருகிறா
சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றிருந்தது. இடைத்தேர்தலின் போது கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே சிறு சிறு மோதல்கள் நிலவி வந்தன.
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 10-ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார். கிருஷ்ணகிரி புதிய மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார். இந்த வருகையின்போது வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க. உயர்மட்ட குழுவுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.- அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? தனித்துப் போட்டியிடுமா? மாற்று கட்சிகளுடன் கூட்டணி வைக்குமா? என்பது குறித்து ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.