Tamilசெய்திகள்

குறைந்த வளர்ச்சி, வேலையின்மை ஆகியவற்றால் ஏழை மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்துகின்றனர் – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி காலாண்டுகள்தோறும் குறைந்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘குறைந்த வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவை மக்கள் மீது, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்துகின்றன’ என கூறியுள்ளார்.

உலக வங்கியின் கடந்த மாத சர்வதேச பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையில் இந்த ஆண்டின் உலக வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், ஆனாலும், இந்தியப் பொருளாதார நிலைமை ‘மிகச் சிறப்பாகக் கையாளக் கூடியது’ என்று அரசும், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து கூறி வருவதாகவும் சாடியுள்ளார்.