சென்னையில் ஷாருக்கானுக்கு கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் “பதான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முன்னோட்டம், டீசர் மற்றும் டிரைலரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படத்தில் இடம்பெற்ற ‘அழையா மழை’ பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.
இப்படம் வருகிற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே ஷாரூக்கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் வைத்து கொண்டாடி வருகின்றனர்.