Tamilசினிமா

யோகி பாபுவின் ‘பூமர் அங்கிள்’ பட டிரைலர் வெளியானது

நகைச்சுவை நடிகர் யோகி பாபு மற்றும் நடிகை ஓவியா இருவரும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்வாதீஸ் எம்எஸ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு முதலில் ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் ‘பூமர் அங்கிள்’ என பெயர் மாற்றப்பட்டது.

அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தர்மபிரகாஷ் இசையமைக்கிறார். சுரேஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். அண்மையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் பிரேம்ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்த டிரைலர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ‘பூமர் அங்கிள்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.