உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் – பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை புகழ்ந்த மேத்யூ ஹெய்டன்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடிய விதம் குறித்து பெருமைப்படுவதாக அந்த அணியின் ஆலோசகர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் ட்விட்டரில் பதிவேற்றிய வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர்கள் தங்களால் இயன்றதை முயற்சித்தனர். அது கைதட்டலுக்கு தகுதியானது என்று நான் நினைக்கிறேன். இந்த தொடரில் நாங்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது, நீங்கள் காயப்படுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அது வலிக்கிறது, ஆனால் உண்மை என்னவென்றால் நாம் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த தொடரில் 100% உங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கியதற்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி செல்லும் நேரத்தில், முடிவுகள் மிகவும் சாதகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த இளைஞர்கள் குழு உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.