Tamilசினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் மன்சூர் அலிகான்

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். அதன்பின்னர் நடிகை மைனா நந்தினி வீட்டினுள் நுழைந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று இன்றுடன் 19 நாட்களை நெருங்கியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோடில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதில் தற்போது 19 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். இதனிடையே வைல்ட் கார்ட் எண்ட்ரியில் யார் உள்ளே வரப்போவது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இதில் உள்ளே நுழையும் யார் என்று அவர்களின் வியூகத்திற்கு ஏற்ப ஒரு ஒருவரை சொல்லி வருகிறனர். அதன்படி ஜி.பி.முத்துவுக்கு பதில் பிக்பாஸ் வீட்டினுள் நடிகர் மன்சூர் அலிகான் உள்ளே நுழையவுள்ளார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துக் கொள்ள மாட்டேன். அப்படி கலந்துக் கொள்வதாக இருந்தால், ‘நான் தான் பிக்பாஸாக இருப்பேன்’ என நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூத்தடிப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும், தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தால், ‘விவசாயத்திற்கு முக்கியத்துவம்’ கொடுக்கும் நிகழ்ச்சியாக, தான் பிக்பாஸாக இருந்து நடத்துவேன் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.