Tamilசெய்திகள்

ஜெயலலிதா இறப்பு தேதியில் முரண்பாடு இருக்கிறது – ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் தகவல்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

* 2012 பொதுக்கூட்டத்தில் சசிகலா குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டாம் என கட்சி உறுப்பினர்களை ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

* உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் சசிகலாவை மட்டும் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

* சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியாவின் சாட்சியத்தின்படி சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே நல்லுறவு இல்லை.

* சாட்சியங்கள் அளித்த தகவலின்படி, ஜெயலலிதா 4.12.2016 அன்று மாலை 3 மணியில் இருந்து 3.50 மணிக்குள் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

* 5.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.