Tamilசினிமா

நடிகர் சல்மான் கான் போதை பொருள் பயன்படுத்தியவர் – யோகா குரு ராம்தேவ் பரபரப்பு பேச்சு

உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் போதை பொருளுக்கு எதிரான இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஆரியவீர் மற்றும் வீராங்கனா மாநாடு என்ற பெயரிலான இதில், யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, நடிகர் சல்மான் கான் போதை பொருளை பயன்படுத்தியவர். நடிகர் ஆமீர் கானை பற்றி எனக்கு தெரியாது.

நடிகர் ஷாருக் கானின் குழந்தை கூட போதை பொருள் பயன்படுத்தும்போது பிடிபட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். நடிகைகளை எடுத்து கொண்டால், கடவுளுக்கு மட்டுமே அவர்களை பற்றி தெரியும் என கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

திரை துறை முழுவதும் போதை பொருள் விளையாடுகிறது. அரசியலிலும் கூட போதை பொருட்கள் உள்ளன மேலும் தேர்தலின்போது, மதுபானம் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு போதை பொருளுக்கு அடிமையாவதில் இருந்தும் இந்தியா விடுபட வேண்டும் என நாம் ஒரு தீர்மானம் எடுத்து கொள்ள வேண்டும். இதற்காக நாமொரு இயக்கம் தொடங்குவோம் என யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீரென மரணம் அடைந்த பின்னர் திரை துறையை சுற்றி போதை பொருள் பயன்பாடு என்பன போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இதில், பிரபல முன்னணி இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட திரையுலக நடிகைகள் கூட சிக்கி, வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.