Tamilவிளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் – இந்திய வீரர் தீபக் ஹூடா விலகல்

டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

முதல் டி20 போட்டி வரும் 28-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. 2-வது டி20 போட்டி அக்டோபர் 2ம் தேதி கவுகாத்தியிலும், 3-வது டி20 போட்டி அக்டோபர் 4-ம் தேதி இந்தூரிலும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக தீபக் ஹூடா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஷ்ரேயஸ் அய்யர் இடம் பிடித்துள்ளார். இதேபோல், ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.