
விசாலம்
(கடந்த வாரம் வாஸ்துவின் முக்கியத்துவம், அடிப்படைகள் ஆகியவற்றுடன் கிழக்கு, வடக்கு திசைகளில் உள்ள மனைகளின் வாஸ்து குறித்துப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இங்கே.)
மனைகளில் தெற்கு மனையும் சிறந்தது தான். இது பெண்மணிகளுக்கு சிறப்பைத் தரும். வடக்கு மனையைப் போல் இதுவும் வியாபாரிகளுக்குச் சிறந்தது தான். சின்ன தொழிலாளியைக்கூட உயர்த்தி விடும். ஆனால் நியாயத்திற்குக் கட்டுப்பட்டுச் செயல் புரிய வேண்டும். வியாபாரம் செய்யும் ஒருவர் இந்த மனையில் இருக்கும் அவர்கள் குடும்பப் பெண்மணியையும் கூட்டுச் சேர்த்தால் வியாபாரம் பெருகும்.
ஆனால் வரவுக்கு மீறிய சிலவும் உணடு. எதிர்ப்பாராத செலவும் வரும். சில சில்லரை உடல் பிணிகள் வரும். ஆனால் வந்த மாதிரி போய்விடும். அதிகம் பாதிக்காது. இந்தத் தெற்கு மனையில் வசிப்பவர் அதிகம் ஆன்மீகத்தில் ஈடுபட்டு, கடவுள் சிந்தனையுடன் வாழ வேண்டும். ஏனென்றால் மிக விரைவில் திருஷ்டி அல்லது தோஷத்தால் பாதிப்புகள் எளிதில் வந்து தாக்கும்.
ஹனுமானின் ஸ்லோகங்களோ அல்லது லட்சுமி நரசிம்ம ஸ்லோகங்களோ படிக்கலாம். தவிர, கந்த சஷ்டி கவசம் மிக நன்மை தரும்.
சரி, இப்போது தெற்கு மனை எப்படி இருக்க வேண்டும்?
இந்த மனையில் தெற்கு நோக்கிய தென்கிழக்குப் பகுதி, துண்டித்து இருக்கக்கூடாது. தென் மேற்குப் பகுதி நீண்டு இருக்கக் கூடாது. தெற்குப் பகுதி சரிந்தும் இருக்கக்கூடது. இவை தோஷங்கள் தரும். இந்த மனையைப் பார்த்து வாங்கிவிட்டால் இன்பம் தான். அத்துடன் தெய்வ வழிபாடும் சேர்ந்துகொண்டால் அமைதியான வாழ்க்கை தான்.
மேற்கு மனை, சற்று சுமார் என்று தான் சொல்ல வேண்டும். இங்கு அதிக உழைப்பு தேவை. அதிகமாகப் பாடுபட்டால் தான் பலன். கிழக்கு மனையில் முதலில் தெரிவது சூரியனின் உதயம். ஆனால் மேற்கு மனையில் சூரியனின் அஸ்தமனம் தான் தெரியும். மனம் அமைதி அவ்வப்போது குறையும்.
செவ்வாய் ஆட்சியோ, உச்சமோ இருப்பவர்களுக்கு இது நன்றாகத் தூக்கிவிடும் என்று சிலர் சொல்கிறார்கள். உழைப்பால் நல்ல பலன் கிடைத்தாலும் எதிர்ப்பார்த்த பெயர் (recognition) கிடைப்பதில்லை. எல்லாம் முடிந்தாற் போல் இருக்கும் ஆனால் ஏதாவது இடையூறு இருந்துகொண்டே இருக்கும். இதற்கும் சில ஸ்லோகங்கள் உள்ளன. சிரத்தையும் நம்பிக்கையும் முக்கியம்.
பெரிய வியாபாரிகளுக்கு இந்த மேற்கு திசை அவ்வளவு ஏற்றதல்ல. அரசுப் பணியாளர்களுக்கும் சிறு தொழிலாளர்களுக்கும் ஏற்றது. சிலருக்கு ஜாதக ரீதியாக நாலாவது ஸ்தானம் நல்ல அமைப்புடன் இருந்தால் அல்லது பூர்வ புண்ணிய பலன் இருந்தால் அவர்கள் மேற்கு மனையிலும் 'ஒஹோ' என்று இருப்பார்கள்.
இந்த மனையிலும் எல்லா இடமும் சமமாக துண்டித்துப் போகாமல் இருப்பது அவசியம்.
(தொடரும்.........
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Jun 03, 2009
* Do not use semicolon(;)