
விசாலம்
நாம் பள்ளியில் பூகோளத்தில் வட துருவம், தென் துருவம் பற்றிப் படித்திருக்கிறோம். இதில் பூமிக்கு ஆகர்ஷண சக்தி இருப்பதைப்
பற்றியும் அறிந்துகொண்டிருக்கிறோம். இதில் northern hemisphereஇன் காந்த சக்தி southern hemisphereஇல் அமைந்துள்ளது. இதே போல் தெற்குப் பகுதியின் காந்த சக்தி, வட துருவத்திலும் அமைந்துள்ளது.
இது வாஸ்துவிற்கும் மிகவும் உதவுகிறது. கிழக்குப் பகுதியில் சூரியனைக் காண்கின்றோம். அதே போல் மேற்குப் பகுதியில் சந்திரனைக் காண்கின்றோம். சூரியன் அருகிலேயே வருவது சுபகிரஹம் குரு. வடகிழக்கில் குரு இருக்கிறார். வடக்கிலே புதனும் உள்ளது.
வடக்குப் பகுதிக்கு அதிபதி குபேரன்; கிழக்குப் பகுதிக்கு அதிபதி இந்திரன.
இப்போது கிழக்கு, வடக்கு, வடகிழக்கு என்ற திசைகளைப் பார்க்கையிலே உல்குக்கே ஒளி தரும் சூரியன் கிழக்கிலும் கல்விக்கு மிக
முக்கியமான புதன் வடகிழக்கிலும் உள்ளார்கள். மிக மிக முக்கியமான குருவும் அதிபதியான இந்திரனும் கிழக்கில் இருக்கிறார்கள். ஆகையால் இந்த வடக்கு, வடகிழக்கு திசை மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது.
வடகிழக்கு பூஜை அறைக்கு உகந்தது. இந்த இடத்தில் காலணிகள், டாய்லெட் அல்லது குப்பைக் கூளங்கள் இருக்க, வீட்டில் நிம்மதி கெடுகிறது. வடகிழக்கு மூலையை ஈசான மூலை என்பார்கள். இது மிகவும் சக்தி வாய்ந்த மூலை.
ஒரு கட்டடத்திற்கு மிகச் சிறந்த மனை, சதுரமாக இருக்க வேண்டும் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். இது போல் அமைய சக்திகள் சிதறாமல் ஒரே இடத்தில் பாய்ந்து, அடர்ந்து இருக்க, வசதியாக அமைகிறது. கட்டடத்தின் நடுப் பகுதி பிரும்மஸ்தானம். இந்தப் பிரம்ம ஸ்தானத்தில் சக்திகள் பாய்ந்து நிற்கின்றன. ஆகையால் பிரும்மஸ்தானம் மிகவும் ஒரு உயர்ந்த ஸ்தானம்.
சிலர் அழகுக்காக வளைவு கொடுத்தும் அல்லது வேறு டிசைன்களில் கட்டடத்தில் இருக்கும் அறைகளை அமைக்கிறார்கள். காண்பதற்கு அது அழகாக இருந்தும் பிரும்மஸ்தானத்தில் சக்திக் குறைந்து பலன் இல்லாமல் போகிறது. அழகுடன் அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனை வாங்கும் போது கோணலாக இருந்தால் அதைச் சரியான சதுரமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். செவ்வக வடிவிலும் ஆக்கிக்கொள்ளலாம். மனையில் எதிர்ப் பக்க அளவுகள் சமமாக இருத்தல் அவசியம்.
எல்லா மூலைகளும் சரியான மையத்தில் சந்திக்க வேண்டும். அதாவது நாலு கோணங்களும் 90 டிகிரி இருத்தல் அவசியம். முக்கியமாக, தென் மேற்குப் பகுதி 90 டிகிரி நிச்சயமாக இருக்க வேண்டும். தென் மேற்குப் பகுதி மேடாக இருக்க வேண்டும்; அதே போல் வடகிழக்குப் பகுதி சற்று தாழ்வாக இருக்க வேண்டும். இப்படி இருக்கும் மனையில் நிம்மதிக்குக் குறைவு இருக்காது.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Aug 10, 2009
* Do not use semicolon(;)