
விசாலம்
ஜோதிடம் என்ற சொல் வரும்போது, கூடவே ஜாதகம் என்ற சொல்லும் நவகிரஹங்கள் என்ற சொற்களும் வந்து விடும்.
நவகிரஹங்கள் நம் எல்லோருக்கும் தெரியும். அதுவும் ஒவ்வொரு கோயிலிலும் நவகிரஹ நாயகர்கள் அவர்களுக்கு ஒத்த வர்ணத்தில் உடை அணிந்து ஒவ்வொரு திசையில் பார்த்தபடி நிற்பதையும் பார்க்கிறோ. சனிக்கிழமையன்று எள்முடித்த விளக்கையும் சனீஸ்வரன் முன் ஏற்றி வழிபடுகிறோம்.
ஜாதகம் என்பது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று ஒன்பது கிரஹங்களைக் கொண்டு அவரவர் முன் வினைக் கர்மாவுக்கேற்ப நல்ல இடங்களிலோ, கெடுதல் செய்யும் இடங்களிலோ அமர்ந்து நம்மை ஆட்டிப் படைக்கின்றன.
இந்த ஒன்பது கிரஹங்களும் 12 ராசிக் கட்டங்களில் அமர்ந்து, அதனது பார்வையாலும் பலனைக் கொடுக்கின்றன. இந்த 12 ராசிக் கட்டங்களில் தான் 27 நட்சத்திரங்கள் அமைந்திருக்கின்றன. மொத்த ராசிக்கும் சேர்த்து 360 டிகிரி உண்டு. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 டிகிரி அதே போல் 12 ராசிகளில் 27 நட்சத்திரங்கள சம்மாகப் பகிர்ந்து பிரிக்கப்பட்டுள்ளன. ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை ராசி என்றும் சூரியன் இருக்கும் இடத்தை லக்னம் என்றும் சொல்கிறோம்.
இப்போது நாம் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து நாலாவது வீட்டிற்கு வருவோம். ஏன் என்றால் அந்த இடம் வீட்டையும் குறிக்கிறது. இந்த நாலாம் இடத்தில் சுப கிரஹங்கள் என்று சொல்லப்படும் குரு, சுக்கிரன், சந்தரன், புதன் போன்றவை இருந்தாலும் நாலாவது இடத்தைப் பார்த்தாலும் வீடு பாக்கியம் உண்டு.
இதேபோல் சந்திரன், சுக்கிரன் சேர்ந்தாலும் உச்சகிரஹம் இருந்தாலும் வீடு பாக்கியம் உண்டு. புதன் நாலாம் இடத்தைப் பார்த்தாலும் சொந்த வீடு உண்டு. இதே போல் பலவித அமைப்புகள் வீடு பிராப்தியைத் தருகிறது. சிலர் கையில் பணமில்லாமல் இருக்கும் போதே ஜாதக அமைப்பில் வீட்டு பாக்கியம் இருந்தால் எப்படியோ சொத்து வழியாகவோ அல்லது லாட்டரி அடித்தோ அந்த நேரத்தில் வீடு கிடைத்து விடும். இவை எல்லாம் கோள் செய்யும் கோலாட்டங்கள்.
ஜாதக அமைப்பைப் பார்த்துத் தகுந்த நேரத்தில் வீடு கட்ட, அதுவும் நல்ல வாஸ்து அமைப்புடன் கட்ட, ஜாதகத்தில் நடுவில் கொஞ்சம்
போதாத காலம் வந்தாலும் வாஸ்து பலமாக இருப்பதனால் அத்தனை கெடுதல் வராது. ஆனால் வாஸ்துவும் கெட்டிருந்தால் அனுபவிக்கத்தான் வேண்டும். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக இறைச்சக்தி என்று ஒன்று இருக்கிறது. அந்தக் கடவுளின் அருளும் கருணையும் இருந்தால் எல்லாமே நன்மைதான்.
(தொடரும்..............
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Jul 29, 2009
* Do not use semicolon(;)