
விசாலம்
நம் வீட்டிற்கு எதிரில் சாலை அல்லது சின்னத் தெரு சில சமயங்களில் அமைந்து விடும். இதற்குத் தெருக்குத்து என்று வாஸ்துவில் கூறுவார்கள். சில ஊர்களில் இதைத் தெருத்தாக்கம் என்றும் சொல்வார்கள். பொதுவாகத் தெருக்குத்தில் இருக்கும் வீடுகளை வாங்கச் சிலர் யோசிப்பார்கள். அதனால் கெடுதல் உண்டாகும் என்ற நம்பிக்கைதான்.
இதிலும் எல்லாத் திசை தெருக்குத்தும் தீமையை விளைப்பதில்லை. குறிப்பாக வடகிழக்கில் அல்லது கிழக்கில் தெருக்குத்து இருந்தால் அதன் எதிரில் அமையும் வீடு நன்மை பெறும். ஆனால் ஒரு தெருக்குத்துதான் இருக்க வேண்டும்.
எப்போதும் தென் கிழக்கு அதாவது அக்னிப் பகுதி சரியாக அமையவில்லை என்றால் பிரச்சனைதான். அத்துடன் அங்கு தெருக்குத்தும் சேர பிரச்சனை இரட்டிப்பாக வளரும். அங்கு தீமை அதிகமாகக் காணலாம். இதே மாதிரி தென் மேற்கிலும் இருந்தாலோ, வடமேற்கில் இருந்தாலோ மன வருத்தம் பிரச்சனைகள் என்று நிமமதி கெடும்.
தென்கிழக்குப் பகுதியில் கோடியில் இல்லாமல் தெற்குப் பகுதியில் இருக்கும் தெருக்குத்து, பின் வடமேற்குப் பகுதியில் மேற்கில் உள்ள
தெருக்குத்து தீமையைத் தராது என்று அபிப்ராயம் உள்ளது.
சாதாரணமாகவே தெருக்குத்தைப் பார்க்கும் வீட்டின் வாசலில் ஒரு கணபதியின் சிலையைப் பிரத்திஷ்டை செய்து ஒரு சின்னக் கோயில் மாதிரிக் கட்ட, இந்தத் தீய விளைவு அகலும் என்பதால் பலர் வீட்டு வாசலில் இந்தப் பிள்ளையார் கோயிலைக் காணலாம். அதற்கு தினமும் பூஜை செய்து பிரசாதமும் சமர்ப்பிப்பது மிக அவசியம்.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Jul 11, 2009
* Do not use semicolon(;)