விசாலம்
நாலு திசைகளிலும் மட்டுமல்லாமல் வாஸ்துவில் நான்கு திசை சந்திக்கும் மூலைகளும் சேர்த்து 'அஷ்டதிக்' என்று சம்ஸ்கிருதத்தில்
சொல்லப்படுகிறது; அதாவது எட்டு திசைகளாகக் கருதப்படுகின்றன. அவை:
வடக்கு, வடகிழக்கு
கிழக்கு, தென் கிழக்கு
தெற்கு, தென் மேற்கு
மேற்கு, வடமேற்கு.
ஒவ்வொரு திசைக்கும் அதிபதியாக ஒரு தேவதையும் ஒரு கிரகமும் இருக்கும். அவற்றைத் திரும்பவும் சொல்கிறேன்.
| திசைகள் |
அதிபதி |
கிரகம்
|
குணம் |
| கிழக்கு |
இந்திரன் |
சூரியன் |
வெற்றி, அறிவு |
| தென்கிழக்கு |
அக்னி |
சுக்கிரன் |
ஆசை |
| மேற்கு |
வருணன் |
சனி |
சோகம், அடக்கம் |
| தென்மேற்கு |
நைருத்தி |
ராகு |
சக்தி, அதிகாரம், ஈகோ |
| வடக்கு |
குபேரன் |
புதன் |
அறிவு, வியாபாரம் |
| வடகிழக்கு |
ஈசானியன் |
குரு |
அறிவு, ஆக்கம், நற்சிந்தனை |
| தெற்கு |
யமன் |
செவ்வாய் |
துணிவு, வலிமை |
| வடமேற்கு |
வாயு |
சந்திரன் |
கற்பனை, காதல், மாறும் மனம் |
இப்போது நாம் வடக்கு வாசலைக் கண்போம்; குபேரனுடைய வாசல் இது. மிக அருமையான வாசல்; அதுவும் வடகிழக்கில் தலைவாயில் அமைந்துவிட்டால் அமோகம்தான். பணம் புரளும். மிகுந்த நன்மை பயக்கும். வடமேற்கில் வாசல் அத்தனை சுகமில்லை. இந்தப் பகுதியில் வாசல் அமைந்தால் அநாவசியமாக வம்புச் சண்டை, பணவிரயம் ஏற்படுகிறது. வடக்கின் நடுவிலோ, வடகிழக்கிலோ வாசல் அமைய, நல்ல சுபீட்சம் தான். இது ஒன்று மட்டும் அமைந்து, மற்ற வாஸ்து கெட்டிருக்க பயன்படாது, ரொம்ப மோசமாகாமல் பாதுகாக்கலாம்.
தெற்கு வாசல், இது சிறந்ததுதான். நல்ல காற்று வீசும் கிழக்குப் பகுதியில் வாசல் அமைக்க முடிந்தால் மிக நல்லது. தெற்குப் பகுதியிலேயே அமைக்கலாம். அல்லது அக்னி மூலையான தென் கிழக்கிலும் ஒரு முக்கிய வாசலாவது main gate இருக்க வேண்டும் தென் மேற்கு பகுதியில் தலைவாசல் அமைக்கக் கூடாது வீட்டில் வியாதி, மனக்கஷ்டம், நிம்மதி இன்மை என்று போராட்டம்தான். ஆகையால் தென்மேற்கு தலைவாசலைத் தவிர்த்து விடவும்.
(தொடரும்....
=============================================
வாஸ்து தொடர்பான உங்கள் கேள்விகள் / ஐயங்களுக்கு விசாலம் பதில் அளிப்பார். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamileditor@chennaionline.com
Oct 27, 2009
* Do not use semicolon(;)