மதுரைக் காட்சி

அக்டோபர் 2009

அன்புள்ள மனைவி பத்மாவுக்கு,

இன்று முகச்சவரம், குளியல் கிடையாது. காரணம் மூன்று நாட்களாக மூக்கிலிருந்து ப்ரவாகம்; வீரப்பனிடம் சிக்கிய பணயக் கைதி மாதிரி எப்போதும் ஒரு படபடப்பு; வெப்பம்.

பக்கத்து  அறையில் இருப்பார் மெடிகல் ரெப்ரஸெண்டேடிவ்; நமக்கு ஒத்தாசையாக ஏதாவது செய்வார். 'சளியைக் கரைத்து விடும்' என்று சொல்லி மருந்து கொடுத்தார். அதுதான் ஏற்கெனவே பெருகிக் கொண்டிருக்கிறதே என்று அவர் காதில் படாமல் முனகினேன். மருத்துவர்களிடமும் மருத்துவப் பிரதிநிதிகளோடும் ஒருவகையான தகவல் தொடர்புதான் சாத்தியம். அவர்கள் கேள்வி கேட்கும்போது மட்டும் நாம் பதில் சொல்ல்லாம். மற்றபடி நாம் ஏதாவது சொல்ல முயற்சி செய்தால் இதுதான் ஏற்கெனவே தெரியுமே என்ற நினைப்பில் இருப்பார்கள். முட்டை இடுகிற கோழிக்குத்தான் மூலாதாரத்தைப் பற்றித் தெரியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏகப்பட்ட ஒயர்களை உடம்பில் பொருத்தி, கணினி வழி காமிராக்களால் குறுக்கு நெடுக்காகப் படம் எடுத்து, நவத்வார வெளியேற்றங்களையும் மின்சார அடுப்பில் ஏற்றி, மொத்தத்தில் நம்முடைய பிரச்சினையைப் பற்றி நாம் பேச முடியாது.

நண்பர் கொடுத்து நொச்சித் தைலமும், மாவுப் பண்டம்போல இரண்டு வகையான மாத்திரைகளும். வாரத்திற்கு இரு முறை தைலத்தைத் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அரப்புப் பொடியும் அருமைத் துணைவியும் இல்லாமல் எண்ணெய்க் குளியல் எப்படி என்று தயங்கினேன். பிறகு விபரீத எண்ணங்களுக்கு விடை கொடுத்துவிட்டு ஷாம்புவைத் துணைக்கு வைத்துக்கொண்டேன்.

மாவுப் பண்டமான மாத்திரைகள், உணவுக் குழாயின் உள்ளே போனவுடன் பல்கிப் பெருகி விடுவதால் பசி குறைந்து, ஓட்டல் பில்லும் குறைந்து விடுகிறது.

மற்றபடி மதுரை நனைந்திருக்கிறது; தொடர்ந்து, தூறல் மழை. வெளியே போக முடியாததால் எதிர்ப்பக்கம் உள்ள அறையில் டிவி பார்த்தேன் – ஜிடிவி. சத்ருகன் சின்ஹா யாரோ ஒரு ஓவர் சைஸ் குண்டனோடு மோதிக் கொண்டிருக்கிறார். சண்டைக் காட்சிகளைப் புரிந்துகொள்ள இந்தி அவசியமில்லை என்பதை உனக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னொரு பிரச்சினை உருவாகிவிட்டது. பார்த்தோமா, ரசித்தோமா என்று நம்மால் இருக்க முடியாது – சண்டையைப் பற்றிய சந்தேகங்கள். ஏன் சினிமாவில் வரும் சண்டைக் காட்சிகளில் எல்லோரும் கோட், சூட், ஜெர்கின் போட்டுக்கொண்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை.

ஜெமினியின் 'ஒளி விளக்கு' திரைப்படம்; சௌகார் ஜானகியைக் கற்பழிக்க வில்லன் முயற்சி செய்வான். காப்பாற்ற வருவார் எம்.ஜி.ஆர்.  கண்ணாடியை உடைத்துக்கொண்டு அவர் குதிக்கும் போது கூட டையோடு கூடிய கோட், சூட்தான். சண்டை மட்டுமில்லை, பொதுவாகவே சினிமா பற்றிய சில சந்தேகங்கள் நம்மோடு ஜென்மாந்திரமாகத் தொடர்கின்றன. உன்னை சாட்சியாக வைத்துக்கொண்டு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு என்னுடைய ஐயப்பாடுகளை அறிவிக்கிறேன்.

   1.  சாவுக் காட்சி அல்லது திவசக் காட்சியில் ஓயாது மழை கொட்டிக்கொண்டே இருக்கிறது. வெயில் மண்டையைப் பிளக்கும் காலத்தில் யாருமே மண்டையைப் போடுவது இல்லையா?

   2. பாசமலர் முதல் படையப்பா வரை கதாநாயகனின் தங்கையைக் காதலிப்பவன் எதிர்க்கட்சியில் சேர்ந்து விடுகிறானே, அது ஏன்?

   3. தலை தெறிக்கும் வேகத்தில் ஒன்றை ஒன்று துரத்திச் செல்லும் காட்சிகளில் குதிரை வீரன், மோட்டார் காரை முந்தி விடுகிறானே அது எப்படி?

   4. சிம்ரன் முதல் ஸ்ரேயா வரை இடுப்பு இருக்கும் போது நடிப்பு எதற்கு என்று காட்சிப்படுத்துகிறார்களே, அது யாருக்காக?

   5. ஊர் உலகத்தில் எங்குமே பயன்பாட்டில் இல்லாத சாரட் வண்டியில் பண்ணையார்கள் பயணம் போகிறார்களே. அது எதற்காக?

   6. தில்லானா மோகனாம்பாள் முதல் அன்பே சிவம் வரை கதாநாயகன் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது அன்போடு கவனித்துக்கொள்பவர்கள் கிருத்துவர்களாகவே இருக்கிறார்களே, அது எப்படி?

இந்தப் பட்டியல் இறுதியானது அல்ல. நீயும் உன் பங்கிற்கு ஒன்றிரண்டு சேர்க்கலாம்.

அன்புடன்

சுப்பு

Oct 22, 2009

Worth a Click

Comments


K.Balaji
Subbu, my experience of reading your article is something unexplainable ! theLivAna neerOdai pOndra eLimaiyana ezhuthu ! kaN munnE kAtchigaLai virivadaiya vaikkum ezhuthu! Brings you personally in front of me! "andha nAtkaL yEn andha nAtkaLagavE pOi vittana?"
17 Nov 2009 03:14 PM

karuppu
dear vinay, madurai has a special place in tamil movie scenerio. the people of madurai worship meenakshi amd movies in that order.
01 Nov 2009 05:07 PM

vinay
subbu`s pen is flowing but i wonder where is madurai in this article.
31 Oct 2009 10:26 PM

subbu
dear venky, i write under the penname `subbu`. poga poga theriyum is penned by me in www.tamilhindu.com yours subbu (v.r.balasubramaniyan)
31 Oct 2009 09:16 AM

venky
i need a clarification. does this subbu write the poga poga theriyum in www.tamilhindu.com. is it another writer?
29 Oct 2009 10:21 PM

rahman
only noticeble thing with simran and sreya is their iduppu and not nadippu.why should the tamil society denied the pleasure of watching it?
29 Oct 2009 01:29 PM

shafi ahmad
xubbu has written about the hospital staff being christiana. has he noticed that the terrorists are always portrayed as muslims. check any vijayakaanth movie you will know it.is it fair to equate muslims with terrorism?
28 Oct 2009 06:05 AM

varathan
muttai itum kozhikku moolaathaaraththaip patri theriyum.what a punchline.mr.subbu
27 Oct 2009 07:57 PM

bhaskar
bravo subbu! you have dared to challenge the filmy psyche of the tamilians.go ahead and wake them up.
26 Oct 2009 09:16 PM

saravanan
readers should take note that the movie stars are agitating now, that is for everyone to see.they have waged a brutal war against the print media. they have takenup the noblest cause.the task of defnding the oldest proffession.
26 Oct 2009 05:43 PM

puthiyavan
சினிமாவைப் பற்றிய சந்தேகங்களை சுப்பு சுவையாக எழுதியிருக்கிறார்.என்னுடய சந்தேகம் சினிமா நடிகர்களைப் பற்றியது. தமிழக மக்களைப் பாதிக்கும் அன்றாடப் பிரச்சினைகள் எத்தனையோ இருக்கின்றன. எந்த வீதியாவது பள்ளமில்லாமல் இருக்கிறதா? மருத்துவ மனைகளில் மூக்கைப் பிடிக்காமல் நுழைய முடிகிறதா?காசு கொடுக்காமல் அரசு அலுவலகங்களில் காரியம் நடக்கிறதா? ரேஷன் கடைகளில் நடக்கும் அடாவடிகளைப் பற்றி கேள்வி கேட்க முடிகிறதா?படித்து முடித்தால் வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் இருக்கிறதா? கழுத்தைப் பிடிக்கும் விலைவாசிக் கொடுமையில் கவுரவமாக கடன் வாங்காமல் வாழ முடிகிறதா? சினிமாக்காரர்களைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம். இந்த மாதிரி மக்களை வாட்டி எடுக்கும் விஷயங்களுக்காக சினிமாக்காரர்கள் எப்போதாவது போராடியிருக்கிறார்களா? வெளிநாடுகளில் தங்கள் படம் வியாபாரம் ஆக வேண்டும் என்பதற்காக இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார்கள்.மேலிட உத்தரவுக்குப் பயந்து அதை முடி வைத்து விட்டார்கள்.சத்யராஜ் போன்றவர்களின் படத்தை தமிழ்நாட்டிலேயே யாரும் பார்ப்பதில்லை. ஆகவே அவருக்கு கர்நாடகத்தில் படம் ஓடாதே என்ற கவலை இல்லை, கர்நாடகத்தை எதிர்த்து கம்பீரமாகப் பேசுகிறார். என்னுடய சந்தேகம் இதுதான்: மக்கள் நடத்தும் நியாயமான போராட்டங்களில் சினிமா நடிகர்கள் கலந்துகொள்கிறார்களா?
26 Oct 2009 12:53 PM

perarivivaalan
does your doubts stop with movies? or tamil movies? contemporary literature, novel, puthukkavithai. journalism, tv shows everything ha its oddities. i wish subbu writes such things too.
26 Oct 2009 11:57 AM

Mahesh
After a long time 'thangu thadai illatha tamizh nadai..' In a column, how you are able to bring in a lot of things..Very nice.. Please keep writing..
24 Oct 2009 10:50 PM

maasilaamani
writer sujatha has written about the incongruities in the english movies.subbu has pointed out the anomalies in the tamil screen.nice piece of writing.
24 Oct 2009 08:21 AM

hariharan
இதையும் சேர்த்துக்கொள்ளலாம். ஏழையாக இருந்தாலும் கூலிவேலை செய்தாலும் காதல் டூயட் பாடும்போதுமட்டும் சினிமா காதலர்கள் ஆஸ்த்ரெலியாவிலிரிந்து அலாஸ்கா வரை உருண்டுபுரண்டு செர்ந்துகொள்கிறார்களே. அவர்களுக்கு செலவு பயணப்படி எல்லாம் எப்படி கட்டுப்படி ஆகிறது?
23 Oct 2009 04:42 PM

thirumaal
subbu`s set of questions about tamil movies is classic. he should add a few more in the next part.
23 Oct 2009 08:53 AM

Hari Krishnan
உங்கள் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம் சுப்பு: ஆரம்பநாள் தொடங்கி ஒவ்வொரு சண்டைக் காட்சியிலும், கதாநாயகனைப் பார்த்துப் பதறியபடி ஒரு பெண்--கதாநாயகனின் தாய், சகோதரி, காதலி--நின்றே ஆகவேண்டும். திறந்த வாயைப் புறங்கையால் பொத்தியபடி தவித்துக்கொண்டேஏஏஏ இருக்க வேண்டும்.
23 Oct 2009 08:49 AM




Security Code


 
* Do not use semicolon(;)
Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MITHUNA MITHUNA : Today keep up your word in money matters. If you promise something stick on...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:48 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.