மலைப்பகுதியில் மின் வேலி-செல்வராஜ்

 

சென்னை, ஜுன் 26 (டிஎன்எஸ்)  தமிழகச் சட்டப்பேரவையில் இன்று (ஜுன் 26) மலைப் பகுதியிலிருந்து வன விலங்குகளை கீழே இறங்காமல் தடுப்பதற்காக மின்சார வேலி அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளில் அதிகமாக நடைபெற்று  வருவதாக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின் போது இந்த தகவலை தெரிவித்த அமைச்சர் செல்வராஜ்,  இதுவரையிலும் சுமார் 11 கோடி செலவில் 909 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்வேலி அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேப்போல வன விலங்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 2 கோடியே 72 லட்சம் அளவிற்கு நிதி உதவி வழங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

யானைக் கூட்டங்கள் அதிகமாக ஊர் பகுதிக்கு வருவதை தடுப்பதற்காக பருவ காலங்களில் யானைகள் செல்லும் வழித்தடங்களை உருவாக்குவதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக மட்டுமே இந்த ஆண்டு ரூ.3 கோடியே 25 லட்ச ரூபாய் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் அமைச்சர் செல்வராஜ் தெரிவித்தார்.

வன விலங்குகள் மலைப் பகுதியிலிருந்து கீழே இறங்காமல் தடுப்பதற்காக மின்சார வேலி அமைக்கும் பணி கடந்த  3 ஆண்டுகளில் அதிகமாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 332 கிலோ மீட்டர் தூரத்துக்கு வேலி அமைக்கப்படும். (டிஎன்எஸ்)

Jun 26, 2009

Comments





Security Code


 
* Do not use semicolon(;)

உங்கள் வாக்கு

தேர்தல்..!
தேமுதிக-வின் கூட்டணி முடிவு...!


உங்கள் பொங்கல் நினைவுகள்

Daily Predictions

KUMBHA KUMBHA : Pay good attention to the minor details in connection with a major project,...More
இ-நேர்காணல்
Most Commented
12:21 PM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2010,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.