பாரிஸ், டிச.2 (டிஎன்எஸ்)
ஈராக்கில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிக் கொண்டிருந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது ஷூ வீசிய ஈராக்கிய பத்திரிகையாளர் மீது ஷூ வீசப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த புஷ் கடந்த 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத் சென்ற போது அங்கு நடந்த நிருபர்கள் கூட்டத்தில் முன்டசர் அல்-ஜைதி என்ற நிருபர் அவர் மீது தனது ஷூவை வீசிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிரான்சு தலைநகர் பாரீஸ் நகரில் ஜைதி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, அவரை நோக்கி அரபு நாட்டைச் சேர்ந்த நிருபர் ஒருவர் ஷூவை வீசினார்.
அப்போது அவர் ஜைதிக்கு எதிராக ஓங்கி குரல் எழுப்பினார். ஜைதி குனிந்து கொண்டதால் ஷூ அவர் மீது படாமல் பின்னால் உள்ள திரைச்சீலையின் மீது மோதி கீழே விழுந்தது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
(டிஎன்எஸ்)
Dec 02, 2009
* Do not use semicolon(;)