புதுடெல்லி, அக்.30 (டிஎன்எஸ்)
அக்டோபர் மாதம் 11ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரையிலான பத்து நாட்களில் ரயில்வேத் துறை மொத்தம் ரூ.2,216.29 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு இந்த வருவாய் ரூ.2,073.46 கோடியாக இருந்தது. இதன் மூலம் ரயில்வே வருவாயில் 6.89 சதவிகித வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
இந்த பத்து நாட்களுக்கு ரயில்வேயின் மொத்த சரக்கு வருவாய் ரூ.1,388.69 கோடியிலிருந்து 9.54 சதவிகித உயர்வு காணப்பட்டு ரூ.1,521.18 கோடியாக அதிகரித்துள்ளது. இதே போல கடந்த ஆண்டு ரூ.617.20 கோடியாக இருந்த மொத்த பயணிகள் வருவாய் இவ்வாண்டு ரூ.618.23 கோடியாக அதிகரித்துள்ளது. இது 0.17 சதவிகித வளர்ச்சியாகும்.
பிற வருவாயானது ரூ.52.13 கோடியிலிருந்து ரூ.59.81 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 14.73 சதவிகிதம் வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை 208.04 மில்லியனில் இருந்து 193.44 மில்லியனாக குறைந்துள்ளது. அந்த வகையில் 7.02 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புறநகர் மற்றும் புறநகர் அல்லாத மார்க்கங்களில் இந்த பத்து நாட்களுக்கு பதிவு செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை முறையே 101.34 மில்லியன் மற்றும் 92.10 மில்லியனாகும்.
கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் இது முறையே 113.62 மில்லியன் மற்றும் 94.42 மில்லியனாக இருந்தது. இதன் மூலம் அந்த வகையில் பதிவு செய்யப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை புறநகர் மற்றும் புறநகர் அல்லாத மார்க்கங்களில் முறையே 10.81 சதவிகிதம் மற்றும் 2.46 சதவிகிதம் குறைந்துள்ளது.
(டிஎன்எஸ்)
Oct 30, 2009
* Do not use semicolon(;)