
புதுதில்லி, நவ.4 (டிஎன்எஸ்)
பழங்குடியினப் பகுதிகளில் ஆயுதச் சூழ்நிலையில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர்வது சாத்தியமில்லை என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
முதல்வர்கள் மற்றும் பழங்குடி விவகாரங்கள் துறை அமைச்சர்களின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று உரையாற்றினார்.
அவர் மேலும் பேசியதாவது:
பழங்குடியினர் சந்தித்துவரும் பிரச்சினைகள் சிக்கலானவை. பல ஆண்டுகளாக நீடித்த வேற்றுமை உணர்வு இப்போது அபாயகரமான திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியினரைக் கையாளும் வழிமுறைகளை நாம் கண்டிப்பாக மாற்ற வேண்டும். பழங்குடியினரின் மனங்களை நாம் வெல்ல வேண்டும்.
கடந்த காலங்களில் இத்தகைய விவகாரங்களை நாம் உணர்வுபூர்வமாக கையாண்டோம் எனக் கூறமுடியாது. பழங்குடியினருக்காக மேலும் பலவற்றை செய்ய முடியும். செய்ய வேண்டும்.
ஆயுதச்சூழலில் எவ்வித பொருளாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்வது சாத்தியமில்லை. மேம்பாட்டு நடவடிக்கைகளில் பழங்குடியினர் முக்கியப் பயனாளிகளாக இருக்க வேண்டும், வன்முறைப் பாதை மக்களுக்கு துயரத்தை மட்டுமே அளிக்கும்.
வன்முறையை சகித்துக்கொள்ள முடியாது. அச்சுறுத்தல்கள் உறுதியுடன் முறியடிக்கப்படும்.
இவ்வாறு மன்மோகன் சிங் பேசினார்.
(டிஎன்எஸ்)
Nov 04, 2009
* Do not use semicolon(;)