ராஞ்சி, நவ.6 (டிஎன்எஸ்)
ஹவாலா மோசடி குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவின் உதவியாளர் விகாஸ் சின்ஹாவை அமலாக்கத்துறை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜரான அவர் திடீரென கைது செய்யப்பட்டார். மதுகோடா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முதல் நபர் ஆவார் இவர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அவரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவினர் உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. பின்னர் அவர் பாட்னாவில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு கொண்டுச் செல்லப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
மதுகோடா தனது ஹவாலா மோசடிப் பணத்தை முதலீடு செய்ய இவர் உதவியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 06, 2009
* Do not use semicolon(;)