ஆஸி.யில் 4 கல்லூரிகள் மூடல்: 300 இந்திய மாணவர்கள் திண்டாட்டம்

 

மெல்போர்ன், நவ.7 (டிஎன்எஸ்)

ஆஸ்திரேலியாவில் குளோபல் கேம்பஸ் மேனேஜ்மெண்ட் குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான 4 கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் அதில் படித்து வந்த 300 இந்திய மாணவர்கள் உள்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன் நகரங்களில் குளோபல் கேம்பஸ் மேனேஜ்மெண்ட் குரூப் நிறுவனத்துக்கு சொந்தமான 4 கல்லூரிகளில் 300 இந்திய மாணவர்கள் உள்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 700 பேர் படித்து வந்தனர்.

இந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக 4 கல்லூரிகளும் நேற்று முன்தினம் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இழுத்து மூடப்பட்டன.

இது குறித்து, ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதரக துணை அதிகாரி வி.கே.சர்மா கூறுகையில், `கல்லூரிகளை திடீரென்று மூடியிருப்பதால், இந்திய மாணவர்கள்தான் அதிக அளவில், பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இனி இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும். இப்படி கல்லூரிகள் இழுத்து மூடப்படுவதற்கு பெருமளவில் நடைபெறும் முறைகேடுகளும் ஒரு காரணம்' என்று தெரிவித்தார்.

ஏற்கனவே, இனவெறி தாக்குதலால் ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், கல்லூரிகளை மூடியிருப்பதால் அதில் படித்து வந்த மாணவர்கள் திண்டாட்டம் அடைந்து இருக்கிறார்கள்.

(டிஎன்எஸ்)

Nov 07, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சர்வதேசம் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MEENA MEENA : If you stretch your budgets , without considering practical aspects then yo...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:30 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.