டெக்சாஸ், நவ.6 (டிஎன்எஸ்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க ராணுவ வீரர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டத்தில் 12 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள். மேலும் 31 பேர் படுகாயம் அடைந்தனர்.
ராணுவ தளத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்த போது அங்கு வந்த சகவீரான மேஜர் ஹசன் மாலிக் என்பவர் இரு கைகளிலும் வைத்திருந்த துப்பாக்கிகளால் சகவீரர்களை நோக்கி சுட்டார். இதில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த மோதலில் நடாலும் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் முதலில் தெரிவித்திருந்தது. தற்போது நடால் உயிருடன் இருப்பதாகவும், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சந்தேகத்தின் பேரில் மேலும் 2 வீரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது குறித்து சரியாகத் தெரியவில்லை என லெப்டினன்ட் ஜெனரல் போப் கோன் தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர்களுக்கிடையே நிகழ்ந்துள்ள இந்த மோதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வருத்தம் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவத்துள்ள அவர் இந்த மோதல் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.
(டிஎன்எஸ்)
Nov 06, 2009
* Do not use semicolon(;)