சவூதியில் இந்தியர் உள்ளிட்ட 3 பேருக்கு மரண தண்டனை

 

துபாய், நவ.5 (டிஎன்எஸ்)
 
வீட்டை கொள்யைடித்தது மற்றும் பெண்ணை கொலை செய்தது தொடர்பாக, ஒரு இந்தியர், இலங்கையைச் சேர்ந்த 2 பேருக்கு சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியரான முகமத் நவுசத், இலங்கை நாட்டைச் சேர்ந்த பன்டர் நிக்கார் மற்றும் ஹாலீமா அபூபக்கர் ஆகியோருக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகமது நவுசத் கேரள மாநிலம் பட்டாம்பி என்ற இடத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் சவூதி அரேபிய பெண் ஒருவரைக் கொலை செய்து ஆபரணங்களைத் திருடிய குற்றத்திற்காக இவர்களுக்கு இத்தண்டனை நிறைவேற்றபட்டுள்ளது.

பாலியல் வல்லுறவு, கொலை, ஆயுத முனை கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் சவூதி அரேபிய நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி வருகிறது.

(டிஎன்எஸ்) 

Nov 05, 2009

Worth a Click

Comments


V. Ramaswamy, Singapore
பிழைக்கப் போன இடத்திலுமா இப்படிச் செய்யவேண்டும். இந்தியாவில் குற்றவாளிகள் தப்பிப்பதுபோல் தப்பித்துவிடாலாமென்று தப்புக் கணக்கு போட்டிருக்கிறார் போல் தெரிகிறது. இம்மாதிரி தண்டனைகள் கொடுத்து இந்தியாவிலும் குற்றங்கள் குறைக்கலாமே?
06 Nov 2009 10:57 AM




Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சர்வதேசம் செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MAKARA MAKARA : It would be a good day for students if they learn to look for facts in hand...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
04:00 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.