ஜலந்தர், நவ.3 (டிஎன்எஸ்)
கடந்த 1984ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்து 25 ஆண்டு ஆவதையொட்டியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படாததை கண்டித்தும் இன்று பஞ்சாப்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.
பிரதமர் இந்திராகாந்தி 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தனது 2 சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனால் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக பயங்கர கலவரம் நடந்தது. 3 நாட்கள் தொடர்ந்து நடந்த கலவரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
கலவரம் நடந்து 25 ஆண்டு ஆவதையொட்டியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கப்படாததை கண்டித்தும் இன்று பஞ்சாப்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தல்கல்சா என்ற சீக்கிய அமைப்பு அறிவித்து இருந்தது.
அதன்படி இந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகனங்களும் ஓடவில்லை.
ரயில்கள் வழக்கம்போல ஓடின. எனவே பல இடங்களில் ரயில்களை மறித்தனர். அமிர்தசரசில் இருந்து டெல்லி சென்ற சதாப்தி விரைவு ரயிலை சிறை பிடித்தனர். 9 ரயில்கள் மறியலால் ஆங்காங்கே நின்றன.
இந்த போராட்டத்தால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, பதேகர் ஷாகில் ஆகிய இடங்களில் கண்டன ஊர்வலங்களும் நடந்தன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)