கெய்ரோ, நவ.6 (டிஎன்எஸ்)
எகிப்து நாட்டுக்கு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல்காந்தி எம்.பி. சென்று இருக்கிறார். கெய்ரோ நகரில், 22 முஸ்லிம் நாடுகளின் அமைப்பான அரபு லீக் தலைவர் அமர் மூசாவை அவர் சந்தித்து பேசினார்.
அப்போது இரு தலைவர்களும், இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினை உள்பட தெற்கு ஆசிய நாடுகளில் பிரச்சினைகள் பற்றி பேசினார்கள்.
கெய்ரோ பல்கலைக்கழகத்துக்கு சென்ற ராகுல்காந்தி, அந்த நாட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், "தீவிரவாதத்தை எதிர்த்து அனைவரும் ஒன்று பட்டு போராட வேண்டும். அனைத்து நாடுகளின் வளர்ச்சியும், இளைஞர்களின் கையில் தான் இருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.
(டிஎன்எஸ்)
Nov 06, 2009
* Do not use semicolon(;)