சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
தொடர் மழை காரணமாக கடலூரில் நடைபெற இருந்த வேலை வாய்ப்பு முகாம் நவம்வர் 13ஆம் தேதி நடைபெறும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவைத் தலைவருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளியில் நவம்பர் 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடத்துவதாக இருந்த 'கலைஞர் 86’ வேலை வாய்ப்பு முகாம் கடலூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நவம்பர் 13, 14, 15 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)