பெரம்பூர் லோகோ பாலத்தில் மண் சரிவு

 

சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)

தொடர் மழை காரணமாக சென்னை பெரம்பூர் லோகோ பாலத்தின் ஒரு பகுதியில் இன்று திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.

சென்னையில் நேற்று மாலை முதல் பெய்து வரும் தொடர் மழையால், வியாசர்பாடி கணேசபுரம் பாலத்தில் மழை நீர் தேங்கி யுள்ளதாலும் பெரம்பூர் ரயில்வே பாலப் பணிகள் நடைபெறுவதாலும் வடசென்னை வாசிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
 
இந்த வழியாக கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வழக்கமாக செல்பவர்கள் மழை காரணமாக பெரம்பூர் லோகோ பாலம் வழியாக சென்றனர்.

அதிக வாகனங்கள் பாலத்தில் சென்றதாலும், தொடர்ந்து மழை பெய்த காரணத்தினாலும் பாலத்தின் ஒரு பகுதியில் இன்று திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் அருகில் புதிய பாலம் கட்டும் இடத்தில் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நடந்து செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வேறு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

(டிஎன்எஸ்)

Nov 07, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

THULA THULA : A busy day where you would be meeting influential people and having discuss...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
11:24 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.