புதுக்கோட்டை, நவ.3 (டிஎன்எஸ்)
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
5 படகுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் பிடிக்க சென்றவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்று விட்டதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி, மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி ஆகியோருக்கு விசைப்படகு மீனவர்கள் நலச் சங்கத் தலைவர் தந்தி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
இதில், மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களின் உறவினர்களை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் சந்தித்து மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தனர்.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)