புதுடெல்லி, நவ.7 (டிஎன்எஸ்)
கர்நாடகாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல், ரெட்டி சகோதரர்களின் அரசியல் சித்து விளையாட்டில் சிக்கியதால் கடவுள் என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
தனியார் கன்னட தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில், அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காண்பதில் நாம் காலத்தை கடத்தியிருக்கக் கூடாது” என்றார்.
நான் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் எனக்கு ஆதரவு அளிக்கத் தவறி விட்டனர். மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் இருந்து எனது கவனம் விலகியிருக்கக் கூடாது. கடவுள் என்னை மன்னிப்பார் என்றே நம்புகிறேன் என்றும் எடியூரப்பா கூறினார்.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)