பெங்களூரு, நவ.6 (டிஎன்எஸ்)
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் முதன்மைச் செயலாளர் வி.பி. பாலிகர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஐ.எஸ்.என்.பிரசாத் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து வி.பி. பாலிகர் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி. ஜனார்த்தன ரெட்டி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கருணாகர ரெட்டி ஆகிய ரெட்டி சகோதரர்கள் தலைமையிலான எம்.எல்.ஏக்கள், பா.ஜ.க முதலமைச்சர் எடியூரப்பா, அவரது முதன்மைச் செயலாளர் வி.பி.பாலிகர் உட்பட பலரை மாற்றக்கோரி மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரெட்டி சகோதரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சமரச தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாக, எடியூரப்பா தனது முதன்மைச் செயலாளரை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
(டிஎன்எஸ்)
Nov 06, 2009
* Do not use semicolon(;)