காபூல், நவ.5 (டிஎன்எஸ்)
ஆப்கனில் நடந்து வரும் தொடர் தாக்குதல் காரணமாக, அதன் பணியாளர்கள் 600 பேரை திருப்பி அழைக்க ஐ.நா. முடிவு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க படையினர், ஐ.நா. குழு அதிகாரிகள் தங்கி இருக்கும் அலுவலகங்கள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் ஐ.நா. அலுவலர்கள் தங்கி இருந்த விருந்தினர் மாளிகையில் அக்டோபர் 28ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 6 அதிகாரிகள் பலியாயினர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பணியாளர்களில் 600 பேர் திருப்பி அழைக்கப்படுகின்றனர். இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)