இஸ்லாமாபாத், அக்.30 (டிஎன்எஸ்)
முஷாரப் ஆட்சி காலத்தில் ஒருவர் காணாமல் போனது தொடர்பான வழக்கு விசாரணையில் அவர் ஒத்துழைக்கவில்லை என்றால் அவரை குற்றவாளியாக அறிவித்து, அவரது சொத்தை பறிமுதல் செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
முஷாரப் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தவறும் பட்சத்தில் மேற்கண்ட நடவடிக்கையை துணிந்து எடுக்க அந்நாட்டு காவல்துறையினருக்கு வடமேற்கு மாகாணத்தின் அபோடாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
முஷாரப் அதிபராக இருந்த போது வடமேற்கு மாகாணத்தில் ஒருவர் காணாமல் போனார்.
அந்த நபர் கடத்தப்பட்டதாகவும், அந்தக் கடத்தலுக்கும் முஷாரபுக்கும் தொடர்பிருப்பதாகவும் காணாமல் போனவரின் குடும்பத்தார் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக அபோடாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் மேற்கண்ட ஆணையை பிறப்பித்துள்ளது.
(டிஎன்எஸ்)
Oct 31, 2009
* Do not use semicolon(;)