சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் வண்ணை தேவகி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது (67).
சென்னை காசிமேடு தண்டையார்நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்த இவர், நேற்றிரவு 11.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
வண்ணை தேவகியின் கணவர் பெயர் ஆல்பர்ட் மாசிலாமணி ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ரவிக்குமார், ரமேஷ்குமார் ஆகிய மகன்களும், ஞானோதயம், ஜெயந்தி, ஆனந்தி ஆகிய மகள்களும் உள்ளனர்.
வண்ணை தேவகியின் உடலுக்கு தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க.வில் கட்சி பணியாற்றிய வண்ணை தேவகி, தி.மு.க. மகளிர் அணி இணை செயலாளர், மாநகராட்சி கவுன்சிலர், சுகாதார துறை சேர்மன் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)