திருவண்ணாமலை, நவ.3 (டிஎன்எஸ்)
இலங்கை அகதிகள் தமிழகத்திலேயே வசிக்க விரும்புவதால் அவர்களுக்கு வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
திருவண்ணாமலை மாவட்டம் அக்தி அந்தல் அகதிகள் முகாமை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, இலங்கை அகதிகளை சந்தித்தபோது அவர்கள், தங்களுடைய குறைகளை என்னிடம் எடுத்துரைத்தனர். அக்குறைகளை நானும் சென்று பார்த்தேன்.
முகாம்களில் உள்ள வீடுகள் வசிக்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. மின் வசதி இல்லை என கூறியுள்ளனர். சின்ன சின்ன குறைகள் உள்ளன. அவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வேறு சில குறைபாடுகளை முதலமைச்சரிடம் அறிக்கையாக தந்து நடவடிக்கை எடுக்கப்படும். பெரும்பாலான இலங்கை அகதிகள் தமிழகத்திலேயே வசிக்க விரும்புகிறார்கள்.
தமிழகத்தில் வசிக்க விரும்புவதால் தங்களுக்கு வீடு வேண்டும் என்று கேட்கிறார்கள். இதுபற்றி முதலமைச்சரிடம் அறிக்கையாக தந்து வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)