புதுடெல்லி, நவ.7 (டிஎன்எஸ்)
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரயில்வே - தமிழ்நாடு அணிகள் இடையிலான சூப்பர் லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.
டெல்லியில் நடந்த இப்போட்டியில ரயில்வே அணி முதல் இன்னிங்சில் 327 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு அணி 3ஆவது நாள் ஆட்டம் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து இருந்தது.
நேற்று 4ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 337 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
பின்னர் 2ஆவது இன்னிங்சை ஆடிய ரயில்வே அணி 59 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து இருந்த நிலையில் இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)