மும்பை, நவ.7 (டிஎன்எஸ்)
பள்ளி கிரிக்கெட் போட்டியில் 439 ரன்கள் குவித்து சாதனை படைத்த சர்ப்ராஸ் கான், இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்திக்க வேண்டும் என்பது எனது கனவாகும் என்று கூறியுள்ளார்.
மும்பையில் நடந்த ஹாரிஸ்ஷீல்டு கோப்பைக்கான 16 வயதுக்குட்பட்ட பள்ளி கிரிக்கெட் போட்டியில் 6ஆம் வகுப்பு மாணவன் சர்ப்ராஸ் கான், இந்தியன் கல்வி சொசைட்டி பள்ளி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 439 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அவர் 421 பந்துகளில் 12 சிக்சருடனும், 56 பவுண்டரியுடனும் இந்த ரன்னை எடுத்தார்.
இதே பள்ளி கிரிக்கெட்டில் 1988ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இழக்காமல் 346 ரன்கள் விளாசி எல்லோரது கவனத்தையும் கவர்ந்த அவர் அடுத்த வருடமே சர்வதேச போட்டியிலும் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
439 ரன் குவித்து சாதனை படைத்த 12 வயது பள்ளி மாணவனான சர்ப்ராஸ் கான் அளித்துள்ள பேட்டியில், 'டெண்டுல்கர் எனக்கு முன்மாதிரி. அதோடு அவரை நான் எனது குருவாக கருதுகிறேன். எனவே என்னை அவருடன் ஒப்பிடாதீர்கள். சச்சின் சாதனையில் ஒரு சதவீத சாதனையை நான் எட்டினால் கூட எனக்கு மகிழ்ச்சி தான். சச்சினை சந்திக்க வேண்டும் என்பது எனது கனவாகும்' என்றார்.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)