திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்: நவ.16இல் நரேஷ்குப்தா ஆலோசனை

 
 திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்: நவ.16இல் நரேஷ்குப்தா ஆலோசனை

செ‌ன்னை,  நவ.5 (டிஎன்எஸ்)
 
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நவம்பர் 16ஆ‌ம் தேதி தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர்களுட‌ன் ஆலோசனை நடத்துகிறார்.

திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா மாவட்ட ஆ‌ட்‌சிய‌ருட‌ன் இன்று ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால் வந்தவாசி தொகுதி ச‌ட்ட‌ம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் செல்வராஜ் மறைவையொட்டி அந்த தொகுதிக்கும் தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

இதனால் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் கோ.பிரகாஷ், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆ‌ட்‌சி‌ய‌ர் ஆகியோருடன் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வரு‌ம் 16ஆ‌ம் தேதி மாலை 3 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

(டிஎன்எஸ்)

Nov 05, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் சென்னை செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MAKARA MAKARA : It would be a good day for students if they learn to look for facts in hand...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
03:57 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.