பாங்காங், நவ.7 (டிஎன்எஸ்)
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதோடு உலக கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றது.
ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியா - கொரியா அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியில் ஜஸ்ஜீத் கவுர் 2 கோலும், ராணி ராம்பால் ஒரு கோலும் அடித்தனர்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி, சீனாவை சந்திக்கிறது. அரை இறுதி ஆட்டத்தில் சீனா 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் 2010ஆம் ஆண்டு அர்ஜென்டினாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)