சேலத்தில் ச‌ட்ட‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் மோத‌ல்: 3 பே‌ர் படுகாய‌‌ம்

 

ச‌ெ‌ன்னை, நவ.3 (டிஎன்எஸ்)
 
சேல‌த்‌தி‌ல் ச‌ட்ட‌க் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் மோ‌தி‌க் கொ‌ண்ட‌தி‌ல் 3 மாணவ‌ர்க‌ள் படுகாய‌ம் அடை‌ந்தன‌ர்.

சேலம் கோரிமேடு செல்லும் வழியில் தனியார் சட்டக்கல்லூரி ஒ‌ன்று உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த விக்னேஸ்வரராஜ் எ‌ன்ற மாணவ‌ர் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது நண்பர் சதீஸ் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

நே‌ற்‌றிரவு இவர்கள் அரு‌கி‌‌ல் உ‌ள்ள டீ‌ கடை‌க்கு வ‌ந்து‌ள்ளன‌ர். அப்போது அங்கு வ‌ந்த 3ஆ‌ம் ஆ‌ண்டு சட்டக்கல்லூரி மாணவர் கரூரை சேர்ந்த பிரபாகர‌‌னு‌ம் வந்து‌ள்ளா‌ர். அ‌ப்போது இவர்கள் மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வாய்த்தகராறில் ஈடுபட்டனர். இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்த மேலும் சில சட்டக்கல்லூரி மாணவர்களு‌ம் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டு‌ள்ளன‌ர்.

அ‌ப்போது ஒருவரு‌க்கொருவ‌ர் ஆயுத‌ங்களா‌ல் தா‌க்‌கி‌க் கொ‌ண்டன‌ர். இதில் விக்னேஸ்வராஜ், சதீஸ், பிரபாகரன் ஆ‌கியோ‌ர் படு காயம் அடைந்தனர். அவ‌ர்க‌ள் சேலம் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்‌க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர்.

இது கு‌றி‌த்து சேலம் கன்னங்குறிச்சி காவ‌ல்துறை‌யின‌ர் மாணவ‌ர்க‌‌ள் ‌மீது கூட்டமாக கூடி தாக்குதல், ஆயுதங்கள் வைத்திருத்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தால் சேலம் தனியார் சட்டக்கல்லூரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

(டிஎன்எஸ்)

Nov 03, 2009

Worth a Click

Comments





Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் தமிழ்நாடு செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

VRICHIKA VRICHIKA : Identify your strength and weakness before you accept big responsibility. I...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
03:24 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.