பெங்களூரு, நவ.7 (டிஎன்எஸ்)
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவை மாற்றியே தீரவேண்டும் என்றும், எங்கள் நிலையில் மாற்றமில்லை என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கூறியுள்ளார்.
பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கட்சி நலனுக்காகவும், மாநில வளர்ச்சிக்காகவும், பா.ஜ.க. தொண்டர்களின் விருப்பப்படி மேலிடம் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
பெல்லாரி மற்றும் கடக் ஆகிய வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்காக 25 ஆயிரம் வீடுகளை கட்ட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதை முதலமைச்சர் எடியூராப்பா தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் எங்களின் வளர்ச்சியை கண்டு மிகவும் பயந்தார் என்றும் ஜனார்த்தன ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)