சென்னை, நவ.7 (டிஎன்எஸ்)
மழை வெள்ள சேத விவரங்கள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் கருணாநிதியுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய ஜவுளித் துறை அமைச்சரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் கே.எஸ். ஸ்ரீபதி, நிதித்துறை செயலாளர் கு.ஞானதேசிகன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் உடனிருந்தனர்.
துணை முதலமைச்சர் இன்று காலை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று மழை வெள்ள விவரங்களை பார்வையிட்டு மழை நீர் தேங்கியிருப்பதை உடனடியாக அகற்றுவதற்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து தலைமைச் செயலகத்துக்கு வந்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். தமிழகம் முழுவதும் மழை வெள்ள விவரங்களை உடனுக்குடன் கேட்டறிந்து நிவாரண நடவடிக்கைகளை விரைவுப் படுத்துமாறு துணை முதலமைச்சரிடம் முதல்வர் அறிவுறுத்தினார்.
(டிஎன்எஸ்)
Nov 07, 2009
* Do not use semicolon(;)